2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’தேங்கிய குப்பைகளை தலையில் கொட்டிய எம்.எல்.ஏ’

A.K.M. Ramzy   / 2021 ஜூன் 14 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மும்பை

  மும்பை உட்பட அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மும்பையின் பல்வேறு இடங்களில் வீதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. பல்வேறு இடங்களில் மழை நீர் வடியாமல் தேங்கி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், சண்டிவாலி தொகுதியின் சிவசேனா எம்.எல்.ஏ திலிப் லண்டே, மழை பாதிப்புகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது ஒரு வீதியில் குப்பைகள் அகற்றப்படாமலும், மழை நீர் வடியாமல் தேங்கி நின்றதையும் கவனித்தார். மழைநீர் வடிகால்களை முறையாக சுத்தம் செய்யாமல் இருந்ததால் அடைப்பு ஏற்பட்டிருந்தது.

இதையடுத்து, அப்பகுதியின் துப்புரவு பணிகளுக்கான அமர்த்தப்பட்ட கொந்தராத்துக்காரரை வரவழைத்தார் எம்எல்ஏ. முறையாக குப்பைகளை அகற்றாததால் வீதியில் தண்ணீர் தேங்கியிருப்பதை சுட்டிக் காட்டிய அவர், கொந்தராத்துக்காரரை கண்டித்ததுடன், தண்ணீர் தேங்கியிருந்த வீதியில் அவரை அமர வைத்தார். அத்துடன், பணியாளர்களிடம் உடனடியாக குப்பைகளை அள்ளி, கொந்தராத்துக்காரர் மீது போடும்படி கூறினார். அதன்படி துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை அள்ளி, கொந்தராத்துக்காரர் மீது கொட்டினர்.

கொந்தராத்துக்காரரை வீதியில் அமர வைத்து தண்டனை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கொந்தராத்துக்காரர் தனது வேலையை ஒழுங்காக செய்யாததால் நான் இவ்வாறு செய்தேன் என எம்எல்ஏ திலிப் லண்டே கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .