Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.K.M. Ramzy / 2021 ஒக்டோபர் 11 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடலூர்
பண்ருட்டி முந்திரி தொழிற்சாலை தொழிலாளி மரணம் தொடர்பாக தேடப்பட்டு வந்த நிலையில்,திராவிட முன்னேற்ற கழக எம்.பி., ரமேஷ் இன்று 11 ஆம் திகதி பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த மேல்மாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராசு (60). பனிக்குப்பத்தில் கடலூர் தி.மு.க., எம்.பி., ரமேஷின், முந்திரி தொழிற்சாலையில் பணிபுரிந்தார். கடந்த செப்டெம்பர் 19 ஆம் திகதி கோவிந்தராசு மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி., ஏ.டி.எஸ்.பி., கோமதி தலைமையில் பொலிஸார் விசாரணை நடத்தினர். இதில் கோவிந்தராசு கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து இவ்வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள தி.மு.க., எம்.பி., ரமேஷை தேடும் முயற்சியில் சிபிசிஐடிபொலிஸார் ஈடுபட்டனர். இந்நிலையில், பண்ருட்டி நீதிமன்றத்தில் முதலாவது மாஜிஸ்திரேட் கற்பகவள்ளி முன்பு இன்று சரணடைந்தார்.
17 minute ago
2 hours ago
15 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
2 hours ago
15 Aug 2025