2026 மார்ச் 07, சனிக்கிழமை

தொழிற்துறை வளர்ச்சியில் தமிழகம் முன்னிலை

A.K.M. Ramzy   / 2021 மார்ச் 14 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 சென்னை:

 தொழிற்துறை வளர்ச்சியில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அவர் கூறியதாவது: தி.மு.க., சொந்த நலன் பற்றி மட்டுமே கவலை கொள்கிறது. அது தன்னுடைய தோல்விகளை மறைக்க முயற்சி செய்கிறது. பெற்றோல் என்பது முற்றிலும் இறக்குமதி செய்யக்கூடியது.

தொழிற்துறை வளர்ச்சியில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. அதுமட்டுமல்லாது சூரிய ஒளியை பயன்படுத்துவதிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது. தி.மு.க.,வும் காங்கிரசும் ஜல்லிக்கட்டுவை தடை செய்தது. பா.ஜ., அரசு அமைந்த பின்னர் தான் அவை மீண்டும் கொண்டுவரப்பட்டது. திமுகவும் காங்கிரசும் வாரிசுகளை கொண்ட கட்சிகள்., பா.ஜ.,ஒன்றும் வட இந்திய மாநில கட்சி அல்ல.  தமிழகத்தில் இராணுவதொழிற்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .