Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.K.M. Ramzy / 2021 ஒக்டோபர் 26 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
மும்பை:
ஆர்யன் கான் தொடர்பான போதை பொருள் வழக்கில் பிரபல நடிகை அனன்யா பாண்டே போதை பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸாரின் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
ஆர்யன் கானுக்கு இதுவரை இரண்டு முறை பிணை மறுக்கப்பட்டுள்ளது. அவரது பிணை மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. இந்நிலையில் ஆர்யன் கானின் வாட்ஸ் அப் சாட் அடிப்படையில் பிரபல நடிகையான அனன்யா பாண்டேயிடம் மும்பை போதை பொருள் தடுப்பு பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்
கடந்த வாரம் அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர், அவரது போன், லேப்டாப் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அனன்யா பாண்டேவுக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறியிருந்தனர். அதன்படி கடந்த வியாழன் மற்றும் சனிக்கிழமை என இருமுறை அனன்யா பாண்டே விசாரணைக்கு ஆஜரானார்.
அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தனர். அப்போது ஆர்யன் கான், வாட்ஸ்அப் சாட்டில், கஞ்சா ஏற்பாடு செய்ய முடியுமா? என்று கேட்டதையும் அதற்கு ஏற்பாடு செய்கிறேன் என அனன்யா பாண்டே பதில் அளித்தது குறித்தும் பொலிஸார் கேள்வி எழுப்பினர். அதற்கு அது 'ஒரு ஜோக்', வேறு ஒன்றும் இல்லை என்று கூறியிருந்தார் அனன்யா பாண்டே.
இந்நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு போதை பொருள் தடுப்பு பிரிவுபொலிஸார் நடிகை அனன்யா பாண்டேவுக்கு சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால், இன்று அனன்யா பாண்டே விசாரணைக்கு ஆஜராகவில்லை. போதைப்பொருள் தடுப்பு பிரிவு சம்மனுக்கு பதிலளிக்க கூடுதல் அவகாசம் கோரியுள்ளார்.
23 minute ago
28 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
28 minute ago
29 minute ago