2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

நாட்டின் கலாசாரத்தை சித்திரிக்கும்: மோடி

Editorial   / 2023 மே 28 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 செங்கோலை புதிய பாராளுமன்றக் கட்டிடத்தில் வைப்பது நாட்டின் கலாசாரத்தை சித்திரிப்பதாக அமையும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

நாடு சுதந்திரம் அடைந்த போது, தமிழக ஆதீனத்தால் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் செங்கோல் வழங்கப்பட்டது. அந்த செங்கோலை தான் தற்போது புதிய பாராளுமன்ற கட்டடத்தில் நிறுவ முடிவு செய்துள்ளனர். ஜனநாயகத்தின் சின்னமான மக்களவையில், மக்களவைத் தலைவர் இருக்கைக்கு அருகில் இந்தியா விடுதலை அடைந்த போது தமிழகத்தின் திருவாவடுதுறை ஆதீனத்தால் வழங்கப்பட்ட தமிழ் வாசகங்கள் பொறிக்கப்பட்ட செங்கோல் வைக்கப்பட உள்ளது.

இன்று (28) பாராளுமன்ற கட்டிடம் திறக்கப்படும் நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த 21 ஆதினங்கள் புதுடெல்லி சென்றுள்ளனர். மத்திய கலாசார அமைச்சகத்தின் சார்பில் நேற்று (27) நடைபெற்ற நிகழ்ச்சியில் புர்டெல்லி வந்துள்ள ஆதீனங்களைப் பிரதமர் நரேந்திர மோடி தனது இல்லத்தில் சந்தித்தார். அவர்களிடம் இருந்து ஆசியும் பெற்றார்.

இதைத் தொடர்ந்து விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: தமிழ்நாடு மிகவும் புண்ணியபூமியாகத் திகழ்கிறது. நாட்டின் விடுதலைக்காக ஏராளமான தலைவர்கள் தமிழ்நாட்டில் இருந்து பாடுபட்டனர். தங்களது இன்னுயிரை ஈந்துள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரமங்கை வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், தேசியக் கவி சுப்பிரமணிய பாரதி உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் சுதந்திரத்துக்காக பாடுபட்டனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X