2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’’நான்பெற்ற தங்கப் பேனாவைத் நந்தினிக்குப் பரிசளிக்கிறேன்’’

Ilango Bharathy   / 2023 மே 10 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகத்தில்  நேற்றைய தினம் நடந்து முடிந்த பிளஸ் 2 (+2)   பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியிருந்தன.

இதில் 94 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இந்நிலையில் இப் பரீட்சையில் அரசு உதவி பெறும்பாடசாலையான, திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பாடசாலை மாணவி நந்தினி சாதனை படைத்துள்ளார்.

இவர் தமிழ் உட்பட அனைத்து பாடங்களிலும் 100-க்கு 100 மதிப்பெண்களை எடுத்து மாநில அளவில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

மாணவி நந்தினிக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நந்தினியின் தந்தை சரவணக்குமார் ஒரு தச்சுத்தொழிலாளி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், வரலாற்று சாதனை படைத்துள்ள நந்தினிக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "ஒரு தச்சுத் தொழிலாளியின் மகள் மாநிலத் தேர்வில் உச்சம் தொட்டிருப்பது பெண்குலத்தின் பெருமை சொல்கிறது. எப்படிப் பாராட்டுவது?அண்மையில் நான்பெற்ற தங்கப் பேனாவைத் தங்கை நந்தினிக்குப் பரிசளிக்கிறேன். திண்டுக்கல் வருகிறேன்; நேரில் தருகிறேன். உன் கனவு மெய்ப்படவேண்டும் பெண்ணே!" இவ்வாறு பதிவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .