2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

நாய், பூனை வளர்க்க கட்டணம் நிர்ணயம்

Freelancer   / 2021 செப்டெம்பர் 27 , பி.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோழிக்கோடு மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நாய் வளர்ப்போர் ரூ.500 மற்றும் பூனை வளர்ப்போர் ரூ.100 கட்டணம்  செலுத்தி அனுமதிப் பத்திரம் பெற வேண்டும் என்று அந்த மாநகராட்சி அறிவித்துள்ளது. 

பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் கால்நடைகள் வளர்க்கவும், செல்லப் பிராணிகளை அழைத்துச் செல்லவும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என கொச்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த நீதிமன்றம் கேரளாவில் உள்ள அனைத்து செல்ல பிராணிகளையும், கால்நடைகளையும் மாநிலத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் கணக்கெடுத்து அவற்றின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும் என்றும் செல்லப் பிராணிகள் வளர்ப்போர் அதற்கான கட்டணத்தை செலுத்தி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது. 

இதையடுத்து கோழிக்கோடு மாநகராட்சி நீதிமன்ற உத்தரவை செயற்படுத்த முதற்கட்ட நடவடிக்கை எடுத்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் கோழிக்கோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கால்நடைகளை எளிதில் கணக்கிட முடியும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .