A.K.M. Ramzy / 2021 ஜனவரி 26 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெங்களூர்
சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் விதித்த 4 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறைவு செய்துவிட்டு சசிகலா, நாளைக் காலை 10 மணிக்கு விடுதலையாகவுள்ளார். அவர் சிகிச்சை பெறும் மருத்துவமனையிலேயே விடுதலை செய்யப்படுவதற்கான ஆவணங்களில் கையெழுத்துப் பெற சிறை அதிகார்கள் முடிவெடுத்துள்ளனர்.
சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதமும் விதித்து கடந்த 2017ஆம் ஆண்டு பெப்ரவரி 14ஆம் திகதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து அதே ஆண்டு பெப்ரவரி 15 ஆம் திகதி பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ர ஹாரா சிறையில் சசிகலா உள்ளிட்ட மூவரும் சரணடைந்தனர்.
4 ஆண்டுகளில் சசிகலா இருமுறை பரோலில் வெளியே வந்துள்ளார். அவரின் தண்டனைக் காலம் ஜனவரி 27 ஆம் திகதி யுடன் நாளை நிறைவடைவதாக சிறைத்துறை அறிவித்தது. இதையடுத்து சசிகலா தனக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை கடந்த நவம்பரில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் செலுத்தினார்.
30 minute ago
43 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
43 minute ago
3 hours ago