2025 மே 12, திங்கட்கிழமை

”நிபா” வினால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கம்

Freelancer   / 2023 செப்டெம்பர் 19 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர் என உறுதி செய்யப்பட்டது. இதற்கு முன்பு 2018 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் நிபா வைரஸ் பரவல் காணப்பட்டது. 2018-ம் ஆண்டு 17 பேர் வரை உயிரிழந்தனர்.

இந்நிலையில், நிபா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை தொடர்ந்து, கேரள சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

இதற்கமைய அடுத்த அறிவிப்பு வரும் வரை கோழிக்கோடு மாவட்டத்திற்கு உட்பட்ட ஆத்தஞ்சேரி, மருதோங்கரை, திருவள்ளூர், குட்டியடி, காயக்கொடி, வில்லியப்பள்ளி மற்றும் கவிழும்பாறை உள்பட 9 பகுதிகளில் உள்ள உள்ளேயும், வெளியேயும் செல்ல யாரும் அனுமதிக்கப்படுவதில்லை என முடிவானது.

எனினும், அத்தியாவசிய பொருட்களின் விற்பனைக்கான கடைகள் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், 9 பகுதிகளில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன என இன்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X