2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

’நிரூபித்தால் நான் தூக்கில் தொங்குவேன் !’

A.K.M. Ramzy   / 2021 செப்டெம்பர் 06 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொல்கத்தா:

மேற்கு வங்காளத்தில் நடந்த நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ.யும், அமுலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளன. இந்த வழக்கில் முதமைச்சர் மம்தா பானர்ஜியின் சகோதரர் மகனும், திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவருமான அபிஷேக் பானர்ஜி எம்.பி.க்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. அதனால், அவருக்கு அமுலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

டெல்லியில் விசாரணை அதிகாரிகள் முன்பு ஆஜராகுமாறு கூறியுள்ளது. இந்த விசாரணையில் ஆஜராக டெல்லி செல்வதற்காக அபிஷேக் பானர்ஜி கொல்கத்தா விமான நிலையத்துக்கு வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

நான் எந்த வகையான விசாரணையையும் சந்திக்கத் தயார். இது கொல்கத்தா வழக்காக இருந்தாலும், டெல்லிக்கு வரவழைத்துள்ளனர். மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் தோற்று விட்டதால், பாரதிய ஜனதா கட்சி  பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. விசாரணை அமைப்புகளை தனது அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்துவதை தவிர பா.ஜ.க.வுக்கு வேறு வேலை இல்லை.

நான் கடந்த நவம்பர் மாதம் பொதுக்கூட்டங்களில் சொன்னதையே மறுபடியும் சொல்கிறேன். நான் 10 காசு சட்டவிரோத பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக எந்த மத்திய அமைப்பாவது நிரூபித்தால், சி.பி.ஐ.யோ, அமுலாக்கத் துறையோ விசாரணை நடத்தவே தேவையில்லை. நானே மேடை மீது ஏறி பகிரங்கமாக தூக்கில் தொங்குவேன் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .