Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 டிசெம்பர் 08 , மு.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
`தனது நிர்வாணப் படத்தை இணையத்தில் வெளியிட்டு விடுவதாக காதலன் மிரட்டியதால்` 12 வயதான சிறுமியொருவர் அவரது வீட்டில் 5 லட்சம் ரூபாவைத்திருடிய சம்பவம் மும்மையில் இடம்பெற்றுள்ளது.
தொழிலதிபரின் மகளான குறித்த சிறுமி, தனியார் பாசாலையொன்றில் கல்வி கற்று வந்துள்ளநிலையில் ‘அமான்‘ என்ற நபரைக் காதலித்து வந்துள்ளார்.
இதன்போது ஒருநாள் அமான் குறித்த சிறுமியை ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்று அவருடன் தனிமையில் இருந்துள்ளதோடு, பின்னர் குறித்த சிறுமியை நிர்வாணமாகப் புகைப்படமும் எடுத்துள்ளார்.
நாளடைவில் குறித்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி அச்சிறுமியிடம் பணம் பறித்து வந்துள்ளார்.
அந்தவகையில் சுமார் 5 லட்சம் ரூபாய் மற்றும் தங்க நகைகளை தனது வீட்டில் இருந்து திருடி, சிறுமி அமானிடம் ஒப்படைத்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.
இந்நிலையில் தங்களுடைய வீட்டிலிருந்து கடந்த சில நாட்களாக நகைகள் மற்றும் பணம் காணாமல் போவதால் சந்தேகமடைந்த அச்சிறுமியின் பெற்றோர் இது குறித்து பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் குறித்த சிறுமியை மிரட்டி அமான் பணம் மற்றும் நகைகளை பறித்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து போஸ்கோ சட்டத்தின் கீழ் அமானை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .