2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

நுங்கு உட்கொண்டால் மார்பகங்கள் பெரிதாகும்; சர்ச்சையில் சிக்கிய மருத்துவர்

Ilango Bharathy   / 2023 ஜனவரி 25 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்ச்சைக்குரிய வகையில் மருத்துவக் குறிப்புகளைத்  தெரிவித்த விவகாரம் தொடர்பாக, பிரபல சித்த மருத்துவர் ஷர்மிகா, நேற்றைய தினம் (24)  இந்திய மருத்துவ சங்கத்திடம் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்த ஷர்மிகா, சமூக வலைதளங்களில் சித்த மருத்துவக் குறிப்புகளைத்  தெரிவித்து வந்த நிலையில், சமீபத்தில் அவர் அளித்த சில குறிப்புகள், சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.

குறிப்பாக, ஒரு ‘குளோப் ஜாமூன்’ உட்கொண்டால் மூன்று கிலோகிராம்  எடை கூடும். குப்புற படுத்தால் மார்பக புற்றுநோய் வரக்கூடும், தினமும் எட்டு நுங்குகள் உட்கொண்டால் பெண்களின்  மார்பகங்கள் பெரிதாகவும், அழகாகவும் மாறும்’ போன்ற மருத்துவ கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.

 இந்நிலையில், ஷர்மிகா,சித்த மருத்துவக் குறிப்பில் இல்லாதவற்றை பேசி வருவதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் அவரிடம் விளக்கம் கேட்டு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில், அவர் நேற்று  இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னர்  ஆஜர் ஆகி விளக்கம் அளித்துள்ளார்.

 எனினும்அவர் தெரிவித்த பதில் திருப்தி அளிக்கவில்லை எனக் கூறப்படுகின்றது.

இதனையடுத்து இது குறித்து  எழுத்து பூர்வமாக விளக்கம் அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அவருக்கு  வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி வரை விளக்கம் அளிக்க, கால அவகாசம்  கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .