2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

படப்பிடிப்புத் தளத்தில் உயிரை மாய்த்த நடிகை; பிரபல நடிகர் கைது

Ilango Bharathy   / 2022 டிசெம்பர் 26 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மும்பையில் பிரபல சின்னத்திரை நடிகையான `துனிஷா சர்மா` தூக்கிட்டுத்  தன் உயிரை மாய்த்த சம்பவம் பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

20 வயதான குறித்த நடிகை  நேற்றைய தினம்(25)  படப்பிடிப்பு தளத்தில் உள்ள கழிவறையில் வைத்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்நிலையில் இது குறித்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் நடிகை துனிஷாவும் அவருடன் நடித்து வந்த ஷீசான் கான் என்பவரும் காதலித்து வந்துள்ளனர் எனவும்,  கடந்த 15 நாட்களுக்கு முன்னர் இருவரும் கருத்து முரண்பாடு காரணமாகப் பிரிந்துள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது.

அத்துடன் காதல் தோல்வியால் ஏற்பட்ட  மன உளைச்சலினாலேயே
துனிஷா இவ் விபரீத முடிவை எடுத்துள்ளார் எனவும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் துனிஷாவைத்  தற்கொலைக்குத்  தூண்டியதாக ஷீசான் கான் மீது வழக்குப் பதிவு செய்து  கைது செய்துள்ள பொலிஸார், அவரை 4 நாட்கள்   காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் நடிகை துனிஷாவின் மரணம் அவரது ரசிகர்கள் மத்தியிலும் சின்னத்திரை வட்டாரத்திலும்  பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .