2025 ஜூலை 19, சனிக்கிழமை

படிக்கச்சென்ற பெண் குத்திக்கொலை

Freelancer   / 2023 ஜூன் 15 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

லண்டனுக்கு படிக்கச் சென்ற ஹைதராபாத்தை சேர்ந்த இளம்பெண், பிரேசில் நாட்டை சேர்ந்த ஒரு இளைஞரால், கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். மற்றொரு பெண்ணும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஹைதராபாத் ராம் நகர் பகுதியை சேர்ந்தவர் தேஜஸ்வினி (27). இவர் பட்ட மேற்படிப்பு (எம்.எஸ்) படிக்க கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் லண்டன் சென்றார். அங்கு தேஜஸ்வினி தனது தோழி அகிலா மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்த பெண் ஒருவருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். ஒரு வாரத்துக்கு முன்பாக, பிரேசிலை சேர்ந்த இளைஞர் ஒருவர், அவரது தோழியுடன் இந்த வீட்டில் வந்து தங்கியுள்ளார். அவரே கத்தியால் குத்தியுள்ளார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X