A.K.M. Ramzy / 2021 ஜனவரி 05 , பி.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
கேரள
கேரள மாநிலத்தில் கோட்டயம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மாநிலப் பேரிடராக கேரள அரசு இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
கோட்டயம் மாவட்டத்தில் நீண்டூர் பகுதியில் அமைந்துள்ள வாத்துப் பண்ணையில் இந்த பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அந்தப் பண்னையில் இருந்த 1,500 வாத்துகளும், இந்த தொற்று தாக்குதலுக்கு உயிரிழந்து விட்டதாக கோட்டயம் மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதுபோல, ஆலப்புழா மாவட்டத்தில் குட்டநாடு பகுதியில் உள்ள ஒரு பண்ணையில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்குகள் நோய் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அந்த ஆய்வில், இது பறவைக் காய்ச்சல் பாதிப்புதான் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
எனவே, இந்த ஹெச்5என்8 என்ற பறவைக் காய்ச்சல் வைரஸ் தொற்று என உறுதி செய்யப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து, பறவைக் காய்ச்சலை மாநிலப் பேரிடராக கேரள அரசு அறிவித் துள்ளது.
2 hours ago
07 Mar 2026
07 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
07 Mar 2026
07 Mar 2026