2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

பாகிஸ்தான் மருமகளுக்கு பாகிஸ்தானுக்குள் நுழைய மறுப்பு

R.Tharaniya   / 2025 ஏப்ரல் 29 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்தரபிரதேச மாநிலம் மீரட் சர்தானா பகுதியைச் சேர்ந்தவர் சனா. இவர் பாகிஸ்தானை சேர்ந்தவரை திருமணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில் அவர், தனது இரண்டு குழந்தைகளுடன் 45 நாள் விசாவில் இந்தியா வந்திருந்தார். அவரது விசா காலாவதியாகிவிட்டதால் அவரை இந்தியாவில் இருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

இதையடுத்து அவர்கள் கடந்த 24-ந் திகதி வாகா எல்லை வழியாக பாகிஸ்தானுக்குள் நுழைய முயன்றனர். அப்போது எல்லையில் இருந்த பாகிஸ்தான் அதிகாரிகள் அவர்களை பாகிஸ்தானுக்குள் நுழைய அனுமதிக்கவில்லை. அவர்களிடம் இந்திய பாஸ்போர்ட் இருந்ததால் பாகிஸ்தானுக்கு திரும்ப அனுமதி மறுக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இருப்பினும், அவரது குழந்தைகள் பாகிஸ்தான் குடிமக்கள் என்பதால் எல்லையைக் கடக்க முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் சனா தனது குழந்தைகளை தனியாக அனுப்பமறுத்துவிட்டார்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X