Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 மே 22 , பி.ப. 07:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள இராணுவப் பிரிவில் கடமையாற்றிவரும் இராணுவ வீரர், பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் உளவாளிக்கு ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் மூலம் ராணுவ ரகசிய தகவல்களை பரிமாறியுள்ளார்.
கடந்த சில நாட்களாக கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 18 ஆம் திகதி அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 3 ஆண்டுகளுக்கு முன்புதான் இவர் ராணுவத்தில் சேர்ந்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த இராணுவ செவிலியர் சேவை ஊழியர் என்ற பெயரில் அந்த பாகிஸ்தான் பெண் உளவாளி இவரிடம் அறிமுகமாகி பழகி வந்துள்ளார்.
அந்த பெண்ணிடமிருந்து இந்த இராணுவ வீரருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அலைபேசிக்கு அழைப்பு வந்துள்ளது. புதுடெல்லியில் சந்தித்துப் பேசலாம் என்பதுடன், காதலையும் வெளிப்படுத்திய அந்தப் பெண், , திருமணம் செய்துகொள்ள விருப்பமாக இருப்பதாகக் கூறியும் முக்கியத் தகவல்களை பெற்றுள்ளார் எனத் தெரியவருகின்றது.
49 minute ago
2 hours ago
2 hours ago
29 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
2 hours ago
2 hours ago
29 Jul 2025