2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

பாசமில்லாத அண்ணன்

A.K.M. Ramzy   / 2021 ஒக்டோபர் 26 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

வேதாரண்யம்:

இன்றைய உலகில் உறவுகளுக்கு சொந்தங் கொண்டாட நேரம் போதாது. காரணம் இந்த உலகில் அனைத்தையும் பெற்று அதிகப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது தான் மனிதனின் வேட்கையாகவுள்ளது. இதேவேளை, சில குடும்பங்களில் சொத்துக்களால் பிரச்சினைகள் ஏற்பட்டு கொலைச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. இவ்வாறான சந்தர்ப்பங்களில்,உறவுகளின் தாற்பரியங்கள் தென்படுவதில்லை .

நாகை மாவட்டம் வேதாரண்யத்தையடுத்த செம்போடை மேற்கு பகுதியை சேர்ந்த இரு சகோதரர்கள் இருந்தனர். இவர்களுக்கு இடையே முன்விரோதம் தொடர்ந்து இருந்து வந்துள்ளது.இவர்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று முன்விரோதம் காரணமாக தம்பியை    அண்ணன் போத்தல் ஒன்றினால்,தாக்கியுள்ளான். இதில் படுகாயம் அடைந்த தம்பியை  அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசினர்  மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தம்பி  பரிதாபமாக உயிரிழந்தான்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .