Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2021 செப்டெம்பர் 07 , பி.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
கோரக்பூர்:
உத்திரபிரதேசம் மாநிலம் பஹ்ராம்பூரில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் , 11 ஆம் வகுப்பு மாணவி சந்தியா சாஹினி, வீட்டிலிருந்து 800 மீற்றர் துாரத்தில் உள்ள தனது பாடசாலைக்குச் செல்ல தினமும் படகில் செல்கிறார்.
சீருடையில் படகில் பயணம் செய்யும் இந்த மாணவியின் தைரியம் மற்றும் கல்விக்கான அர்ப்பணிப்பு காட்சி வைரலாகி அனைவரது பாராட்டுதலை பெற்று வருகிறது.
இது குறித்து மாணவி சந்தியா சாஹினி கூறியதாவது:
கொரோனா தொற்று பரவல் மற்றும் பொதுமுடக்கத்தால் பாடசாலைகள் நீண்ட காலமாக மூடப்பட்டது. தற்போது வெள்ளத்தின் சவாலை எதிர்கொள்கிறோம்.
“என்னிடம் ஸ்மார்ட்போன் இல்லாததால் என்னால் ஒன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள முடியவில்லை. பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டபோது, வெள்ளம் ஏற்பட்டது, எனது படிப்புக்காக நான் முழுமையாக பள்ளியை நம்பியுள்ளேன்.அதனால் நான் படகில் பாடசாலையை அடைய முடிவு செய்தேன்”.
கடின உழைப்பால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை என்பதால் வாழ்க்கையில் சவால்களுக்கு பயப்படுவதில்லை.என் பகுதியில் உள்ள பல பெண்கள் பள்ளிக்குச்செல்வதில்லை, ஏனென்றால் அவர்கள் வெள்ள நீருக்கு பயப்படுகிறார்கள்.ஆனால் எனக்கு பயப்பட நேரமில்லை. எனது குறிக்கோள் எனது இலக்கை அடைய நான் தினமும் கடினமாக உழைக்கிறேன் இவ்வாறு சந்தியா சஹானி கூறினார்.
16 Aug 2025
16 Aug 2025
16 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 Aug 2025
16 Aug 2025
16 Aug 2025