2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

பாப்பரசரை பிரதமர் மோடி சந்திக்கவுள்ளார்

A.K.M. Ramzy   / 2021 ஒக்டோபர் 24 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

புதுடெல்லி

 ஐரோப்பிய நாடான இத்தாலி தலைநகர் ரோமில், 'ஜி20' அமைப்பு நாடுகளின் மாநாடு எதிர்வரும் 30ஆம் 31 ஆம் திகதிகளில்நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 28 ஆம் திகதி  இரவு இத்தாலிக்கு புறப்பட்டுச் செல்கிறார்.

29ஆம் திகதி வாடிகனுக்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கு, 84 வயதான கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பரிசுத்த பாப்பரசர் முதலாம்பிரான்ஸிஸை    சந்தித்துப் பேசவுள்ளார்.   

ஜி 20 மாநாடு முடிந்த பின் ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகருக்கு செல்லும் மோடி, அங்கு தட்பவெப்ப மாற்றம் குறித்து நடக்கும் மாநாட்டில் பங்கேற்கிறார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .