2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

’பாரத்’ பெயரால் பெரும் சர்ச்சை

Freelancer   / 2023 செப்டெம்பர் 06 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லியில் ஜி 20 உச்சி மாநாடு வரும் 9, 10 திகதிகளில் நடைபெற இருக்கிறது. இதற்கான அழைப்பிதழ் குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து அரிசியல் பிரபலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதில் இந்திய குடியரசுத் தலைவர் என்று குறிப்பிடாமல், பாரத குடியரசுத் தலைவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை காங்கிரஸ் மூத்த தலைவரான ஜெய்ராம் ரமேஷும் தனது எக்ஸ் பக்கத்தில் உண்மை என்று பதிவிட்டுள்ளார். அரசியலமைப்புச் சட்டத்தில் மாநிலங்களின் ஒன்றியத்துக்கு இந்தியா என்று பெயர் உள்ளதாகவும், மாநிலங்களின் ஒன்றியம் என்பதும் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளதாகவும் ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா தனது எக்ஸ் பக்கத்தில் பாரத குடியரசு என்று குறிப்பிட்டுள்ளதுடன், சுய விவரக்குறிப்பில் அசாமின் முதலமைச்சர், பாரத் என்றும் குறிப்பிட்டுள்ளார்.ஆசிரியர் நாள் வாழ்த்துகளை எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ள ஆளுநர், தனது வாழ்த்தில் பாரதம் என்றே குறிப்பிட்டுள்ளார்.

வலிமை மற்றும் திறமை மிகு பாரதத்தை உருவாக்குவதில் ஆசிரியர்களுக்கு முக்கியபங்கு உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. வரும் 18ஆம் திகதி கூட உள்ள சிறப்பு பாராளுமன்றக் கூட்டத் தொடரில் இந்தியாவின் பெயர் மாற்றத்துக்கான சட்ட முன்வடிவம் கொண்டுவரப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X