Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2025 பெப்ரவரி 03 , பி.ப. 02:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாராளுமன்றத்தில், வரும் 15ஆம் திகதி இராமாயணம் அனிமேஷன் திரைப்படம் சிறப்பு காட்சியாக திரையிடப்படவுள்ளது.
1993ஆம் ஆண்டு வெளியான ஜப்பான் - இந்திய திரைப்படம் இராமாயணா: தி லெஜன்டு ஆஃப் பிரின்ஸ் ராமா’. இது 24ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. ஆனால் திரையரங்குகளில் வெளியாகவில்லை.
2000ஆம் ஆண்டு துவக்கத்தில் டிவி சேனல்களில் இராமாயணம் மீண்டும் வெளியாகி மக்களிடையே பிரபலம் ஆனது.
இந்நிலையில் இராமாயணம் அனிமேஷன் திரைப்படமாக தயாரிக்கப்பட்டு இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இராமாயணா அனிமேஷன் திரைப்படம் பாராளுமன்றத்தில் வரும் 15ஆம் திகதி சிறப்பு காட்சியாக வெளியிடப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, எம்.பி.க்கள் மற்றும் கலாச்சார துறையைச் சேர்ந்த சிறப்பு அழைப்பாளர்கள் கலந்துகொள்கின்றனர்.
இது குறித்து கீக் பிக்ச்சர்ஸ் விநியோக நிறுவனத்தின் துணை நிறுவனர் அர்ஜுன் அகர்வால் கூறியதாவது,
“நாடாளுமன்றத்தில் இராமாயணம் அனிமேஷன் திரைப்படம் திரையிடப்படுவது எங்களுக்கு பெருமையான விஷயம். எங்கள் பணிக்கு இந்த உயர்ந்த அங்கீகாரம் கிடைப்பது எங்களின் பாக்கியம். இந்த சிறப்பு காட்சி, திரைப்படத்தை காட்டுவது மட்டும் அல்ல, நமது வளமான பாரம்பரியத்தையும், காலத்தால் அழியாத இராமாயண கதையையும் கொண்டாடுவது ஆகும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
37 minute ago
48 minute ago