Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Ilango Bharathy / 2023 மே 03 , மு.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு விவகாரத்தில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதவிர, கூட்டமைப்பின் நிதி தவறாக பயன்படுத்தப்படுவது மற்றும் தவறான நிர்வாகம் உள்ளிட்ட விசயங்களை வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடந்து வருகிறது.
டெல்லியில் கடந்த ஜனவரி 18ஆம் திகதி இதே கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட, ஒலிம்பிக் உள்பட பல்வேறு பிரிவுகளில் சாதனைகளை படைத்த மல்யுத்த வீரர், வீராங்கனைகளான பஜ்ரங் பூனியா மற்றும் வீராங்கனைகள் சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்டோர் கடந்த ஏப்ரல் 23ஆம் திகதி மீண்டும் போராட்ட களத்திற்கு திரும்பினர்.
இந்த சூழலில், டெல்லி பொலிஸார் உணவு மற்றும் குடிநீர் தர விடாமல் சித்ரவதை செய்கிறார்கள். போராட்டக்காரர்கள் சாலையில் படுத்து உறங்குங்கள் என அவர்கள் கூறினர் என மல்யுத்த வீரர் பூனியா குற்றச்சாட்டு தெரிவித்தது பரபரப்பு ஏற்படுத்தியது.
இந்நிலையில், இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய வினேஷ் போகத், நீண்ட காலம் அதிகாரம் மற்றும் பதவியை தவறாக பயன்படுத்தி வரும் நபரை எதிர்த்து நிற்பது என்பது மிக கடினம் என கூறியுள்ளார்.
ஜந்தர் மந்தரில் போராட்டம் தொடங்குவதற்கு முன்பு அதிகாரி ஒருவரை முதன்முறையாக சந்தித்து பேசினோம். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
3 முதல் 4 மாதங்களுக்கு முன், ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபடும் முன்பு, அதிகாரி ஒருவரை சந்தித்து அவரிடம், வீராங்கனைகள் எப்படி பாலியல் துன்புறுத்தல் செய்யப்படுகின்றனர் மற்றும் மனதளவில் சித்ரவதை செய்யப்படுகின்றனர் என்று ஒவ்வொரு விசயம் பற்றியும் கூறினோம். எவ்வித நடவடிக்கையும் இல்லாத நிலையில், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டோம் என அவர் கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago