2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பிரதமர் மோடியிடம் அமெரிக்கா ஒப்படைத்த 157 கலைப்பொருட்கள்

Editorial   / 2021 செப்டெம்பர் 26 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வொஷிங்டன், 

‘குவாட்’ உச்சிமாநாடு, ஐ.நா. பொதுச் சபை கூட்டம் ஆகியவற்றில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்கு 3 நாள் பயணமாகச் சென்ற பிரதமா் நரேந்திர மோடி அங்கிருந்து இந்தியாவுக்கு நேற்று (25) புறப்பட்டாா். 

முன்னதாக பிரதமா் மோடி தனது டுவிட்டரில், இந்தியா-அமெரிக்கா உறவு வரும் ஆண்டுகளில் இன்னும் வலுவாக வளா்ச்சியடையும் என்று நம்புகிறேன். எங்களது மக்களிடையேயான தொடா்பு எங்களது வலிமையான சொத்துகளில் ஒன்று என்று அவர் பதிவிட்டிருந்தார். 

 

இந்நிலையில் பிரதமரின் பயணத்தின்போது இந்தியாவைச் சோ்ந்த 157 பழங்கால கலைப் பொருள்களை அமெரிக்கா அவரிடம் வழங்கி உள்ளது.

 

இதுதொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கலாசார பொருள்களின் திருட்டு, சட்டவிரோத வா்த்தகம், கடத்தல் ஆகியவற்றை எதிா்த்துப் போராடுவதற்கான முயற்சிகளை வலுப்படுத்த ஜனாதிபதி பைடனும், பிரதமா் மோடியும் தங்களது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினா். அதன் ஒரு பகுதியாக இந்தக் கலைப் பொருள்கள் பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் 71 கலாசார பொருள்கள், இந்து மதம் தொடா்பான 60 சிலைகள், பெளத்த மதம் தொடா்பான 16 சிலைகள், சமண மதம் தொடா்பான 9 சிலைகள் அடங்கும். 10ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த ஒன்றரை மீட்டா் ரேவந்தா கற்சிலை முதல் 12-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த 8.5 செ.மீ. உயரமுள்ள நோ்த்தியான வெண்கல நடராஜா் சிலை வரை இதில் இடம்பெற்றுள்ளன என்று அதில் கூறப்பட்டிருந்தது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .