Editorial / 2024 நவம்பர் 26 , பி.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
கர்நாடகா போவி மேம்பாட்டு ஆணையத்தில் கடந்த 2021-22-ம் ஆண்டில் போவி உறுப்பினர்களுக்கு வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் கடனுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சிக்கபள்ளாப்பூர், தொட்டபள்ளாபூர், கலபுரகி ஆகிய இடங்களில் வழக்குகள் பதிவான நிலையில், அந்த வழக்குகள் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.
இதுகுறித்து கடந்த 14-ம் திகதி பெங்களூருவில் உள்ள பத்மநாபா நகரை சேர்ந்த பெண் தொழிலதிபர் ஜீவா (33) என்பவரிடம் பொலிஸார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு தனது வீட்டில் ஜீவா தற்கொலை செய்துகொண்டார். அவர் இறப்பதற்கு முன்பு எழுதியதாகக் கூறப்படும் 11 பக்க தற்கொலை கடிதத்தில், ‘‘கடந்த 14-ம் திகதி முதல் 22-ம் திகதி வரை பொலிஸ் விசாரணைக்கு ஆஜரானேன். அப்போது சிறப்பு புலனாய்வுபிரிவின் துணை காவல் கண்காணிப்பாளர் கனகலட்சுமி என்னை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தினார்.
விசாரணையின் போது எனது ஆடைகளை களைந்து, சயனைடு கொண்டு வந்திருக்கிறேனா? என்று கேட்டார். மேலும், இவ்வழக்கில் இருந்து என்னை விடுவிக்க ரூ.25 லட்சம் லஞ்சம் கேட்டார். அவர் அளித்த ஆவணங்களில் கையெழுத்திட மறுத்ததால் கடுமையாக மிரட்டினார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து உயிரிழந்த ஜீவாவின் சகோதரி சங்கீதா பனசங்கரி பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார். உயிரிழந்த ஜீவாவின் உடலை கைப்பற்றிய பொலிஸார் பிரேத பரிசோதனைக்காக விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த புகார் குறித்து விசாரித்த பொலிஸார், ‘‘பெண் தொழிலதிபரை மிரட்டிய சிறப்பு புலனாய்வு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் கனகலட்சுமி மீது ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 7, பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 108 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தனர்.
9 hours ago
09 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
09 Feb 2026