2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

பெண் பொலிஸ் வன்புணர்வு; தாயும் மகனும் கைது

Freelancer   / 2021 செப்டெம்பர் 26 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய பிரதேச மாநிலம் நீமுச் மாவட்டத்தில் பெண் பொலிஸ் கான்ஸ்டபிளை வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் முக்கிய சந்தேகநபர் மற்றும் அவரது தாய் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் தெரிய வருவதாவது, 

நீமூச்சைச் சேர்ந்த பெண் கான்ஸ்டபிளுக்கு வட்ஸ்-அப் மற்றும் பேஸ்புக் மூலம் ஆண் நண்பர் ஒருவர் அறிமுகமாகி, அவருடன் நீண்டகாலமாக அந்தப் பெண், தகவல்களை பரிமாறி வந்துள்ளார்.

இந்த நிலையில் ஆண் நண்பரின் சகோதரின் பிறந்தநாள் விழாவுக்கு வரும்படி அழைத்ததையடுத்து, அவரும் விருந்துக்கு வந்துள்ளார்.

அப்போது அந்த வாலிபர் அவருடைய சகோதரர் மற்றும் 2 பேர் பெண் பொலிஸை வன்புணர்ந்து ஆபாசமாக படம் பிடித்துள்ளனர். இதற்கு அந்த வாலிபரின் தாயாரே உடந்தையாக இருந்துள்ளார்.

பின்னர் ஆபாச படத்தை காட்டி மிரட்டலில் ஈடுபட்டதையடுத்து, பெண் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .