A.K.M. Ramzy / 2021 மார்ச் 14 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை:
திமுக வெளியிடும் வாக்குறுதிகள், பொய்யும் புரட்டும் கொண்டதாக இருப்பதாக பாரதிய ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் திமுக எம்எல்ஏ சரவணன், இன்று (மார்ச் 14) தமிழக பா.ஜ., தலைவர் முருகன் முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் முருகன் பேசியதாவது: பா.ஜ.,வில் தினந்தோறும் பிரபலங்கள் இணைவது எங்களுக்கு ஊக்கத்தை கொடுக்கிறது. தேர்தலுக்காக எங்களது பிரசார வாகனங்கள் இன்று முதல் துவங்குகிறது. ஒவ்வொரு முறை தேர்தல் வரும்போதும் திமுக வெளியிடும் வாக்குறுதிகள், பொய்யும் புரட்டும் கொண்டதாக இருக்கிறது.
திமுக ஆட்சிக்கு வந்தபிறகு தேர்தல் அறிக்கையை மறந்துவிட்டு, கொள்ளையடிப்பதில் கவனம் செலுத்து கின்றனர். விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் தருவதாக கூறினர். ஆனால், நிலத்தை அபகரிக்க தான் செய்தனர். திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கட்டபஞ்சாயத்து, ஊழல், நில அபகரிப்பு தலைவிரித்து ஆடும் என மக்கள் அச்சத்தில் உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.
பா.ஜ.,வில் இணைந்த சரவணன் பேசுகையில், ‛பிரதமர் மோடியின் கொள்கைகளை எடுத்து செல்வதில் நான் நிச்சயம் பக்கபலமாக இருப்பேன். சுமார் 3 மாதங்களாக பா.ஜ.,வில் சேருவது தொடர்பாக பேச்சு நடத்தி வந்தேன். திமுக.,வில் எம்எல்ஏ.,வாக இருந்ததால் தான் விருப்பமனு தாக்கல் செய்தேன். திமுக.,வில் வேட்பாளராக வாய்ப்பு அளித்திருந்தாலும், நான் பா.ஜ.,வில் சேர்ந்திருப்பேன்.' என்றார்.
50 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
2 hours ago
3 hours ago