2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

பொலிஸாரினால் காலினை இழந்த சிறுவன்

Ilango Bharathy   / 2022 டிசெம்பர் 05 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்தர பிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டம் ,கல்யாண்பூர் பகுதியில் உள்ள ரெயில் நிலையம் அருகே, தள்ளுவண்டியில் இர்பான் எனும் 17 வயதுச்  சிறுவன் பழ வியாபாரம் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம்(03) குறித்த ரெயில் நிலையம் அருகே  அனுமதியின்றி வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தவர்களை வெளியேற்றும் பணியில் பொலிஸார்  ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதன்போது அப்பகுதியில் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்துகொண்டிருந்த  இர்பானை குறித்த இடத்தை விட்டு வெளியேறுமாறு கூறிய பொலிஸார், பழங்கள், எடை போட பயன்படுத்திய தராசையும் தண்டவாளத்தில் வீசியுள்ளனர்.

இதனைச் சற்றும் எதிர்பாராத  இர்பான் தண்டவாளத்தில் வீசப்பட்ட தராசை எடுக்க முற்பட்டபோது,வேகமாக வந்த ரெயில்அவர் மீது மோதியுள்ளது.

இதில் சம்பவ இடத்திலேயே அவரது ஒரு கால் துண்டாகியுள்ளது.

இதனையடுத்து இர்பானை மீட்ட அருகில் இருந்தவர்கள், அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு இர்பானுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இழந்த காலை மீண்டும் பொறுத்தமுடியாமல் போயுள்ளதாக மருத்துவர்கள்  தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இச்சம்பவத்துடன் தொடர்புடைய தலைமை காவலர் ராகேஷ் குமார் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் விசாரணைக்கு பின்னர்  ராகேஷ் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .