2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

போக்குவரத்து நெரிசலால் ஸ்ம்பித்தது டெல்லி

Freelancer   / 2021 செப்டெம்பர் 27 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், வேளாண் சட்டங்கள் இயற்றப்பட்டு ஓராண்டு நிறைவை முன்னிட்டும் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நாடு முழுவதும் பாரத் பந்த்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

விவசாயிகள் நடத்தும் இந்த பாரத் பந்த்துக்கு பாஜக ஆளாத மற்ற மாநிலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் நடத்தும் பாரத் பந்த்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டன.

விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பான சம்யுக்த் கிசான் மோர்ச்சா சார்பில் நடத்தப்படும் இந்த பந்த்தால் பெரும்பாலான மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்தவிதமான சிக்கலும் இல்லை. டெல்லி, உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் சில நகரங்களில் மட்டும் ரயில் போக்குவரத்து, பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

டெல்லி உத்தர பிரதேச மாநிலத்தை இணைக்கும் நெடுஞ்சாலைகள், எக்ஸ்பிரஸ் சாலைகளிலும் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  கேரளாவில் பெரும்பாலான தொழிற்சங்கங்கள் பாரத் பந்த்துக்கு ஆதரவளித்துள்ளதால், அங்கு பொதுப்போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

இந்த பாரத் பந்த் நடக்கும்போது, அனைத்து அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், கடைகள், தொழிற்சாலைகள், வர்த்தக அமைப்புகள் மூடப்படும். பொது நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் ரத்து செய்யப்படும் என்று சம்யுக்தா கிசான் மோர்ச்சா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .