Ilango Bharathy / 2023 ஜனவரி 17 , மு.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொது இடத்தில் வைத்து,தனது மனைவிக்கு முத்தமிட்ட நபரை கும்பலொன்று சரமாரிய தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம், சரயு நதியில் மனைவியுடன் குளித்துக் கொண்டிருந்த குறித்த நபர், தனது மனைவிக்கு முத்தமிட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைப் பார்த்து அதிர்சியடைந்த அப்பகுதி மக்கள், குறித்த நபரை தனியே இழுத்துச் சென்று சரமாரியாக தாக்கியுள்ளனர்.
அதேசமயம் இது குறித்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனினும் இத்தாக்குதலானது எப்போது நடைபெற்றது? என்பது குறித்த தகவல் வெளியாகாத நிலையில், இது குறித்தமேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 minute ago
37 minute ago
38 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
37 minute ago
38 minute ago
49 minute ago