2025 ஜூலை 24, வியாழக்கிழமை

மனைவியால் இரு மகன்களைக் கொன்ற தந்தை

Ilango Bharathy   / 2023 பெப்ரவரி 14 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ராய்ச்சூரில், மனைவி மீதான ஆத்திரத்தில் தனது இரு மகன்களை  தந்தையொருவர்  கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 ராய்ச்சூர் மாவட்டம், ஜக்லேரதொட்டி கிராமத்தில் வசித்து வந்தவர் லிங்கண்ணா. கூலித்தொழிலாளியான இவருக்கு 5, 3 ஆகிய வயதுகளில் இரு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் அண்மைக்காலமாக  லிங்கண்ணாவுக்கு, அவரது மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருந்து வந்துள்ளதாகவும்,  இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில்  கோபமடைந்த அவரது மனைவி, தனது மகன்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு அண்மையில்  தன்னுடைய பெற்றோரின் வீட்டுக்குச்  சென்றுள்ளார்.

இதனையடுத்து நேற்று முன்தினம் தனது மாமியாரின் வீட்டுக்குச் சென்ற லிங்கண்ணா, தனது  மனைவியைச்  சந்தித்து தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு அழைத்துள்ளார்.

எனினும் அதற்கு அவரது மனைவி மறுப்பு தெரிவிக்கவே, கோபமடைந்த லிங்கண்ணா தனது இரு  மகன்களையும்  அழைத்துக் கொண்டு தன்னுடைய வீட்டுக்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில் மனைவியை நினைத்து மன உளைச்சலுக்கு உள்ளான அவர், நேற்று முன்தினம் தனது இரு மகன்களையும் ஆத்திரத்தில் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.

பின்னர் அங்கிருந்து தப்பி ஓட  அவர் முயன்றுள்ள நிலையில் இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் லிங்கண்ணாவை மடக்கிப்பிடித்துப்  பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .