Freelancer / 2023 ஜூன் 26 , பி.ப. 06:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகாவில் 34 வயதான தனது மனைவியான மாலாவுடன் 36 வயதான விஜய் வாழ்ந்து வந்துள்ளார். அங்கு மாரேஷ் என்பவரை சந்தித்தார். இருவரும் நண்பர்களாகினர்.
நண்பர்களான இவர்கள் இருவரும் சரக்கு ஓட்டோவில் துணிகளை எடுத்து கொண்டு கிராமம், கிராமமாக சென்று வியாபாரம் செய்து வந்தனர்.
இதனால் விஜயின் வீட்டுக்கு அடிக்கடி மாரேஷ் சென்று வந்துள்ளார். மாலாவுடனும் அவர் சிரித்து பேசி வந்ததாக தெரிகிறது. இதனால் விஜய், தனது மனைவியுடன் மாரேசுக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகித்துள்ளார். இந்த சந்தேகம் அவருக்கு நாளுக்கு நாள் வலுத்து வந்துள்ளது. இதனால் மாரேசை கொலை செய்ய விஜய் திட்டமிட்டுள்ளார்.
அதன்படி சம்பவத்தன்று விஜய், சரக்கு ஆட்டோவில் மாரேஷ் மற்றும் தனது மற்றொரு நண்பர் ஒருவரை அழைத்துக்கொண்டு ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சென்றார். தனது மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக கூறி மாரேசிடம் விஜய், தகராறு செய்துள்ளார்.
ஆத்திரமடைந்த விஜய், மாரேசை கீழே தள்ளி தான் வைத்திருந்த கத்தியால், ஆட்டை அறுப்பது போல் மாரேசின் கழுத்தை அறுத்துள்ளார். ரத்தம் வெளியேறியது. அதில் விஜய் தனது வாயை வைத்து உறிஞ்சி ரத்தம் குடித்த கொடூரத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவத்தை விஜயுடன் சென்ற அவரது மற்றொரு நண்பர் தனது அலைபேசியில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
இதற்கிடையே சம்பவம் பற்றி கேள்விப்பட்ட மாரேசின் அண்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மாரேசை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இருதரப்பினரும் சமரச பேச்சுவார்த்தைக்கு தயாராகி வந்துள்ளனர். இந்நிலையில், விஜய், மாரேசின் கழுத்தை அறுத்து ரத்தம் குடித்த காட்சிகள் அடங்கிய வீடியோ சமூகவலைத்தளங்களில் திடீரென்று வைரலானது.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago