2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

மனைவியை நிர்வாணமாக்கி அழைத்துச் சென்ற கணவன்

Freelancer   / 2023 செப்டெம்பர் 04 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராஜஸ்தானின் பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த 21 வயது பழங்குடியின பெண், கணவனை பிரிந்து வேறு ஒருவருடன் வசித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் அந்த பெண்ணை பிடித்து அடித்து துன்புறுத்தியுள்ளனர்.

அத்துடன், அந்த பெண்ணின் ஆடையை களைந்து, நிர்வாணப்படுத்தி, கிராமம் முழுவதும் ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி தற்போது வெளியாகி, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, குற்றவாளிகளை பிடிக்க ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இச் சம்பவத்திற்கு முதலமைச்சர் அசோக் கெலட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ’எக்ஸ்’ பதிவில், நாகரீக சமுதாயத்தில் இதுபோன்ற குற்றவாளிகளுக்கு இடமில்லை என்று கூறியுள்ளார்.

விரைவு  நீதிமன்றத்தில்  வழக்குத் தொடுத்து  குற்றவாளிகள்  விரைவில்  கைது செய்யப்பட்டு  தண்டிக்கப்படுவார்கள்  என்றும்  உறுதிபடத்  தெரிவித்துள்ளார்.

இதே போன்று  பிரியங்கா  காந்தியும்  இச்  சம்பவத்திற்கு  கண்டனம் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக  சம்பந்தப்பட்டவர்கள்  மீது  கடும் நடவடிக்கை  எடுக்க  வேண்டும்  என்று  முதல்வர்  அசோக்  கெலாட்டை வலியுறுத்தியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X