2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

மம்தா பானர்ஜி அமோக வெற்றி

Freelancer   / 2021 ஒக்டோபர் 03 , பி.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கு வங்காள மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தான் போட்டியிட்ட பவானிபூர் தொகுதியில் அமோக வெற்றி பெற்றுள்ளார். 

தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் பிரியங்கா திப்ரேவாலை விட 58,832 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதுடன், இவரை எதிர்த்து போட்டியிட்ட பிரியங்கா திப்ரேவால் 26,320 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். 

மேற்கு வங்காள மாநிலத்தில் கடந்த மே மாதம் நடந்த சட்ட மன்ற தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, பா.ஜ.க வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியடைந்தார். 

இந்த சூழலில் மம்தா பானர்ஜி முதல்வராக பதவி ஏற்று 6 மாதத்துக்குள் சட்ட மன்ற உறுப்பினராக பதவி ஏற்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் முதலமைச்சர் பதவியிலிருந்து இறங்க வேண்டிய நிலை இருந்தது. 

இதனால் மம்தா பானர்ஜி தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக பவானிபூர் எம்.எல்.ஏ.வும், வேளாண் மந்திரியாக இருக்கும் சுபன்தீப் சந்தோபத்யாயே தனது பதவியை இராஜினாமா செய்தார். இதையடுத்து, பவானிபூர் இடைத் தேர்தலில் மம்தா பானர்ஜி போட்டியிட்டார். 

பவானிபூர் தொகுதியில் பா.ஜ.க சார்பில் பிரியங்கா திப்ரேவால் களமிறக்கப்பட்டிருந்ததுடன், இதற்கு முன் இருமுறை பவானிபூரில் போட்டியிட்டு மம்தா பானர்ஜி வெற்றிபெற்றிருந்தார். 

கடந்த செப்டெம்பர் 30ஆம் திகதி அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றதுடன், தேர்தல் முடிவுகள், இன்று (03) முடிவுகள் வெளியாகியிருந்தன. இதுபோலவே ஜங்கிபூர் மற்றும் சமஸ்ர்கஞ் ஆகிய தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .