A.K.M. Ramzy / 2021 மார்ச் 11 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை :
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மீது நடத்தப்பட்ட தாக்குதல் வெட்கக்கேடானது என்றும் இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் எனவும் திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டி யுள்ளார்.
திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும் முதலமைச்ச ருமான மம்தா பானர்ஜி, ரேயபாரா அருகே கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து வெளியேறி, காரில் ஏற முயன்றபோது அவரை சில ஆண்கள், பிடித்து தள்ளியதாக கூறப்படுகிறது. இதில் மம்தாவின் இடது கால் மற்றும் மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது.
நான்கைந்து நபர்கள் தன்னை தள்ளிவிட்டதால் காலில் அடிபட்டு வீங்கியிருப்பதாகவும், இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்றும் மம்தா கூறினார். சம்பவம் நடந்தபோது பொலிஸார் யாரும் அருகில் இல்லை என்றும் அவர் கூறினார்.
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago