2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மரணித்த காதலியால் உயிரை மாய்த்த இளைஞன்

Ilango Bharathy   / 2023 ஜனவரி 03 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

புதுவை தேங்காய்த்திட்டு, வைகை வீதியை சேர்ந்தவர் ‘ராமகிருஷ்ண சாய்‘. 19 வயதான கல்லூரி மாணவனான சாய், அதே பகுதியைச் சேர்ந்த தன்னைவிட 3 வயது மூத்தவரான அஞ்சலி என்ற பெண்ணைக்  காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இவர்களது காதல் விவகாரம் குறித்து அறிந்த அஞ்சலியின் பெற்றோர், சாயை தனது மகளிடமிருந்து விலகி இருக்குமாறு  கூறி கண்டித்துள்ளனர்.

இதனையடுத்து  பல முறை அஞ்சலி தொலைபேசியின்  மூலம் சாயைத்  தொடர்பு கொண்ட போதும், சாய் அஞ்சலியின் அழைப்பை ஏற்க மறுத்துள்ளார்.

இதனால் விரக்கியடைந்த அஞ்சலி, கடந்த மாதம் தூக்கிட்டு தன் உயிரை மாய்துள்ளார்.

இந்நிலையில் ”தனது காதலியின் மரணத்திற்கு தானே காரணமாகி விட்டதாக எண்ணி, குற்ற உணர்ச்சியில் சாய் தவித்து வந்துள்ளார்.

இதனால் சாயை அவரது பெற்றோர் சிறிது காலம்  அவரது பாட்டியின்  வீட்டில் இருக்குமாறு அனுப்பி வைத்துள்ளனர்.

இருந்தபோதிலும் காதலியை மறக்க முடியாமல் தவித்த அவர் வீட்டில் யாரும் இல்லாத வேளை தூக்கிட்டுத் தன் உயிரை  மாய்த்துள்ளார்.

 இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .