2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி

A.K.M. Ramzy   / 2021 செப்டெம்பர் 13 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, பரோலில் வந்துள்ள பேரறிவாளன், சிறுநீரகக் கோளாறு மற்றும் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பேரறிவாளன் சிறைத் தண்டனையை அனுபவித்து வருகிறார். இவரது தாயார்  அற்புதம்மாள் அளித்த கோரிக்கை மனுவின்பேரில், கடந்த மே 19ஆம் திகதி 30 நாள்கள் பரோல் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து, பேரறிவாளன் தினமும் ஜோலார்பேட்டை பொலிஸ்  நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார்.

இந்த நிலையில், மீண்டும் 30 நாள்கள் பரோல் வேண்டும் என அற்புதம்மாள் அளித்த கோரிக்கையின்பேரில், மேலும் ஒரு மாதம் பரோலை தமிழக அரசாங்கம்  வழங்கியது.

நான்காவது முறையாக பரோல் நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக, பேரறிவாளன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .