2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

மாற்றுத் திறனாளிகளுக்கு நகரும் கழிப்பறை

Freelancer   / 2021 செப்டெம்பர் 28 , பி.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீடு, பொது இடங்களில் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்துவதற்காக நகரும் நவீன கழிப்பறையை மதுரையைச் சேர்ந்த மின்னியல் வல்லுநர் எம். அப்துல் ரசாக் கண்டுபிடித்துள்ளார்.

ரயில், பஸ், விமான நிலையங்கள், வைத்தியசாலைகள், வர்த்தக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள் போன்ற பொது இடங்களில் மக்கள் பயன்பாட்டுக்கென இந்திய வகைக் கழிப்பறைகளும், முதியோருக்கு மேற்கத்திய வகைக் கழிப்பறை வசதிகளும் ஏற்படுத்தப்படுகின்றன.

ஆனால் இந்தக் கழிப்பறைகளை அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்துவதில் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

இதைத் தவிர்க்கும் விதமாக நவீன நகரும் கழிப்பறைக் கோப்பையை வடிவமைத்து மதுரை பீபீ.குளம் பகுதியைச்சேர்ந்த எம். அப்துல் ரசாக்(50) சாதனை புரிந்துள்ளார்.

ஏற்கெனவே தண்டவாள விரிசல் கண்டறிதல், ராணுவ வீரர்களுக்காகப் பனி தாங்கும் கோட், ரைஸ் குக்கர், கடல் நீரில் எண்ணெய் பிரித்தெடுக்கும் கருவி உள்ளிட்ட பல்வேறு கருவிகளைக் அப்துல் ரசாக் கண்டுபிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .