Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 டிசெம்பர் 07 , மு.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
மின்கம்பத்தில் கட்டிவைத்து பொலிஸார் அடித்ததால் 1,400 க்கும் மேற்பட்ட மக்கள் தேர்தலைப் புறக்கணித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் நேற்று முன்தினம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் உள்ள ‘உன்ட்ஹிலா ‘ என்ற கிராமத்தை சேர்ந்த 1,400 மக்கள் குறித்த தேர்தலைப் புறக்கணித்துள்ளமை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிராம மக்கள் தேர்தலில் வாக்களிக்காதமைக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன் நடந்த சம்பவமே முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது.
உன்ட்ஹிலா கிராமத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் இந்து மத வழிபாட்டு தலமான துல்ஜா பவானி அம்மன் கோவிலில் ‘கர்பா‘ என்ற நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
இதன்போது அக்கோவில் அருகே இஸ்லாமியர்களின் மதராசா உள்ளதால் அந்நிகழ்ச்சியை நடத்துவதற்கு அக்கிராமத்தை சேர்ந்த இஸ்லாமியர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இதன்போது மர்ம நபர்கள் சிலர் கர்பா நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மீது தாக்குதல் நடத்தியதால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார், இச்சம்பவத்துடன் தொடர்புடைய 10 பேரைக் கைது செய்து, அவர்களை அக் கிராமத்தின் மையப்பகுதிக்கு அழைத்து வந்து, அங்குள்ள மின் கம்பத்தில் கட்டி வைத்து கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
இது குறித்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் இச்சம்பவத்தை கண்டித்து உன்ட்ஹிலா கிராமத்தில் உள்ள இஸ்லாமியர்கள் 1,400 பேர் நேற்றுமுன்தினம் நடைபெற்ற தேர்தலில் வாக்களிக்காமல் தேர்தலைப் புறக்கணித்தனர்.
இதனையடுத்து சுமார் 3 ,700 பேரை மொத்த வாக்காளர்களாகக் கொண்ட இக் கிராமத்தில் 43 சதவீத வாக்குகளே பதிவாகியுள்ளதாக தேர்தல் அதிகாரி தெரித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .