Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Freelancer / 2025 மே 05 , பி.ப. 02:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி திரவுபதி முர்மு இம்மாதம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் தரிசனம் செய்வதற்காக கேரளா செல்ல உள்ளார்.
சபரிமலைக்கு இந்திய ஜனாதிபதி ஒருவர் வருவது இதுவே முதன் முறையாகும்.
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக கேரளா செல்லும் அவர், 18 மற்றும் 19ஆம் திகதிகளில் கோட்டயம் குமரகத்தில் தங்கி இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் வருகையை ஒட்டி, சபரிமலை தேவசம் போர்டும், அம்மாநில போலீசாரும் முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன்படி சபரிமலையில் ஜனாதிபதி வரும் நாட்களில் கடுமையான பாதுகாப்பும், கட்டுப்பாடுகளும் அமுல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
மேலும் மெய்நிகர் முன்பதிவு உள்ளிட்ட ஏற்பாடுகள் மாற்றம் செய்யப்படும் என்றும், வழக்கமான பக்தர்கள் அனுமதி ரத்து செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
ஜனாதிபதி வருகையை ஒட்டி, சபரிமலை கோவிலில் சீரமைப்பு பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
41 minute ago
42 minute ago