A.K.M. Ramzy / 2021 மார்ச் 14 , பி.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடில்லி:
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தாக்கப்பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. எட்டு கட்டங்களாக நடக்கும் மேற்கு வங்க சட்டசபை தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி நந்திக் கிராம் தொகுதியில் போட்டியிடுகிறார். சில நாட்களுக்கு முன்னர், அங்கு சென்ற அவர், வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு பிரசார கூட்டங்களில் பங்கேற்றார். அப்போது, கூட்டத்தில், சிலர் தன்னை கீழே தள்ளி தாக்குதல் நடத்தியதாக, மம்தா கூறினார். இதில் கால் மற்றும் உடலில் பல இடங்களில் காயமடைந்ததாகவும், கால் மணிக் கட்டில் வீக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். கோல்கட்டாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று முன்தினம், வீடு திரும்பினார்.
இந்த சம்பவம் தொடர்பாக, அறிக்கை தாக்கல் செய்ய, மாநில தலைமைச் செயலர் அலாபன் பந்தோபாத்யாய், சிறப்பு தேர்தல் பார்வையாளர் அஜய் நாயக், சிறப்பு பொலிஸ் பார்வையாளர்,
விவேக் துபேக்கு ஆகியோருக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டி ருந்தது. இதன்படி அவர்களும் அறிக்கை தாக்கல் செய்தனர். மேலும் கூடுதல் விவரங்களையும் தேர்தல் ஆணையம் கேட்க அதுவும் வழங்கப்பட்டது.
இந்நிலையில், தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், கடந்த வாரம் நந்திகிராமில் மம்தா பானர்ஜி தாக்கப்பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை என தெரிவித்து உள்ளது.
தலைமை செயலர் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் அளித்த அறிக்கை அடிப்படையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதல் காரணமாக அவ்வாறு காயம் ஏற்பட வாய்ப்பு இல்லை என தேர்தல் பார்வையாளர்கள் தங்களது அறிக்கையில் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
43 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
4 hours ago