Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 டிசெம்பர் 15 , மு.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
கர்நாடகாவில், ‘பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ‘பி.ஸ்ரீராமுலு ‘ ”மோசடி செய்வதில் நான் PhD பட்டம் பெற்றுள்ளேன்” எனத் தெரிவித்திருந்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அவர் பெல்லாரி மாவட்டத்தில், உள்ள ஒரு பாடசாலை நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது ” ஒவ்வொரு நாளும் வகுப்பறையில் மாணவர்கள் முன்னிலை தான் அவமானப் படுத்தப்படுவதாகவும், ஒருநாள் தான் 10 ஆம் வகுப்புப் பரீட்சையில் தேர்ச்சி பெற்றபோது , தனது ஆசிரியர் ஆச்சரியமடைந்து என்னிடம் எப்படி தேர்ச்சி பெற்றாய் எனக் கேட்டார்? எனவும், அதற்குப் பார்த்து எழுதியே தேர்ச்சி அடைந்தே எனப் பதிலளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இவ்வாறான மோசடி செய்வதில் தான் PhD முடித்தவர் என்றும் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அவர் தெரிவித்த கருத்தானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .