2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

யுவதியை நிர்வாணமாக 13 கி.மீ இழுத்துச் சென்ற கார்

Ilango Bharathy   / 2023 ஜனவரி 03 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

டெல்லியில் ஸ்கூட்டரில் சென்ற இளம்பெண்ணை  நிர்வாண நிலையில் காரொன்று சுமார் 13 கிலோமீற்றர் இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புது டெல்லியில்  நேற்றைய தினம்  (02) அதிகாலை 3.30 மணியளவில் ‘அஞ்சலி சிங்‘ என்ற 20 வயதான யுவதியொருவர் , கஞ்சவாலா பகுதியில், ஸ்கூட்டரில் பயணித்துக் கொண்டிருந்த போது, மதுபோதையில் 5 பேர் பயணித்த காரொன்று  அவர் மீது மோதியுள்ளது.

 இதன்போது  யுவதியின் உடைகள் காரின் சக்கரம் ஒன்றில் சிக்கிய நிலையில் குறித்த காரானது  காரை நிறுத்துவதற்குப் பதிலாக, யுவதியின் உடலை 13 கிலோமீற்றர் வரை இழுத்துச் சென்றுள்ளதாகக்  கூறப்படுகிறது.

இந்நிலையில் இச்சம்பவத்தை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்த அப் பகுதியில் கடை வைத்திருக்கும் நபர் ஒருவர் இது குறித்து உடனடியாகப்  பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து 4.40 மணியளவில் சுல்தான்புரி பகுதியில் நிர்வாண நிலையில் படுகாயங்களுக்குள்ளான யுவதியின் சடத்தை மீட்ட பொலிஸார், அக்காரின் இலக்கத்தை வைத்து  குறித்த ஐவரையும் கைது செய்தனர்.

விசாரணையில் ‘குறித்த யுவதிக்கு 4 தங்கைகள், 2 தம்பிகள் உள்ளனர் எனவும், அவரது குடும்பத்தில் அவர் மாத்திரமே பணிபுரிபவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம்”  கைது செய்யப்பட்ட ஐவரும் ”எங்களுக்கு எதுவுமே தெரியாது, நாங்கள் விபத்தை ஏற்படுத்தவில்லை. நாங்கள் காரில் சென்று கொண்டு இருந்தோம். உள்ளே  சத்தமாக  பாடல் ஒலிக்கப்பட்டிருந்தது. அதனால் எங்களுக்கு எதுவும் தெரியவில்லை. எங்களைப்  பொலிஸார் கைது செய்த போதுதான் இச்  சம்பவமே எங்களுக்கு தெரிந்தது ”என்று கூறியுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பான அதிர்ச்சி அளிக்கும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 இந்நிலையில் கைது செய்யப்பட்ட ஐவருக்கும்  தண்டனை வழங்கக்கோரி சுல்தான்புரி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் பாரிய  போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

 எவ்வாறு இருப்பினும் யுவதியின்  உடற்கூறாய்வு அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .