Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.K.M. Ramzy / 2021 ஒக்டோபர் 26 , பி.ப. 12:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை
'ரஜினிக்கு தமிழ் எழுத தெரியாது' என அவரது மகள் சவுந்தர்யா கூறியதால், ரஜினிக்கு எதிராக சிலர் பொங்கியுள்ளனர். அண்ணாத்தா படத்தை பார்க்க வேண்டாம்' என்ற கோஷத்தை, சமூக வலைத் தளங்களில் பரப்பி வருகின்றனர்.
ரஜினியின் இளைய மகள் சவுந்தரா நேற்று, 'ஹூட் ஆப்' என்ற குரல் மூலம் கருத்துகளை பதிவு செய்யும் புதிய செயலியை துவக்கியுள்ளார். ரஜினி தன் குரலில் பதிவு செய்து துவக்கி வைத்தார்.
துவக்க இந்நிகழ்ச்சியில் சவுந்தர்யா பேசியதாவது:என் அப்பா ஆசியுடன் இதை துவக்குகிறேன். அவர் எனக்கு தகவல் அனுப்பினால் பேசி அனுப்புவார். அந்த குரலை கேட்டபோது எனக்கு இந்த 'ஹூட் ஆப்' யோசனை தோன்றியது. எழுத படிக்க தெரியாதவர்கள் தங்கள் குரலில் கருத்துகளை பதிவு செய்யலாம். என் அப்பா பல மொழிகள் சரளமாக பேசுவார்; படிப்பார். ஆனால், தமிழ் சரளமாக எழுத வராது. இதை சொல்கிறேன் என்றால், அவருடன் பேசிய பின் தான் சொல்கிறேன். தமிழ் எழுத முடியாது என்பதால், அப்பா மீதான பாசம் போய் விடுமா?இவ்வாறு அவர் பேசினார்.
ரஜினிக்கு தமிழ் சரளமாக எழுத தெரியாது என்ற விஷயத்தை, சவுந்தர்யா கூறியது, சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்தை கிளப்பியுள்ளது. 'அண்ணாத்த படத்தை பணம் கொடுத்து, தியேட்டரில் பார்க்க மாட்டோம்' என்றும் எதிர்ப்பு குரல்கள் ஒலிக்க துவங்கி உள்ளன.
19 minute ago
24 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
24 minute ago
25 minute ago