2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

ரூ.25 கோடி மதிப்புள்ள ஹெரோயினுடன் சிக்கிய பெண்கள்

Freelancer   / 2021 செப்டெம்பர் 23 , பி.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில் 25 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெரோயின் கடத்திவந்த இரண்டு பெண்கள் கைசெய்யப்பட்டுள்ளனர்.

சுங்கவரித்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஜோகன்ஸ்பெர்க்கில் இருந்து டோஹா வழியாக மும்பை வந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையில் 2 வெளிநாட்டு பெண்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவர்களின் உடைமைகளை பிரித்து சோதனை நடத்தியபோது, மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கிலோகிராம் (சர்வதேச மதிப்பு  25 கோடி ரூபாய்) ஹெரோயினை கண்டுபிடித்து பறிமுதல் செய்ததுடன்,  2 பெண்களையும் கைது செய்தனர். 

குறித்த பெண்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .