2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

ரூ.57 கோடி மதிப்புள்ள பாம்பு விஷம் பறிமுதல்

Editorial   / 2021 செப்டெம்பர் 13 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிலிகுரி

கொரோனா வைரஸ் தொற்றுக்கு பாம்பின் விஷத்தின் ஊடாக மருந்து தயாரிக்க முடியுமென அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், 57 கோடி ரூபாய் மதிப்புள்ள பாம்பு விஷம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேற்கு வங்க மாநிலம் தக்சின் தினஜ்பூர் மாவட்டத்தில் இந்திய-வங்கதேச எல்லை பகுதியில் 137 ஆவது பிஎஸ்எப் படைப் பிரிவினர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் அப்பகுதியில் உள்ள டோங்கி கிராமத்தில் புதிதாக ஒரு வீடு கட்டப்பட்டு வருகிறது. அங்கு சந்தேகத்தின் பேரில் வீரர்கள் சோதனை நடத்தினர்.

அப்போது, ஒரு பையில் 3 ஜார்கள் இருந்தன. ‘மேட் இன் பிரான்ஸ்’ என அச்சிடப்பட்டிருந்த அந்த ஜார்களை பறிமுதல் செய்து திறந்து பார்த்தபோது, பாம்பு விஷம் இருந்தது. தூள், கட்டி, திரவ வடிவில் இருந்த இதன் சந்தை மதிப்பு ரூ.57 கோடி ஆகும். பின்னர் அவற்றை மண்ணில் புதைத்துவிட்டோம் என எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .