2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

லட்சத்திற்கு குழந்தையை விற்க முயன்ற தாய்

Freelancer   / 2023 செப்டெம்பர் 07 , பி.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆந்திர மாநிலம், அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் கோசங்கி தேவி. நிறைமாத கர்ப்பிணியான இவர் குடும்ப வறுமையால் தவித்தார். இதன் காரணமாக அவர் தனக்கு பிறக்க போகும் குழந்தையை விற்க முடிவு செய்தார். அம்பேத்கர் காலனி அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்ற கோசங்கி தேவி அங்கு பணியில் இருந்த ஆஷா ஊழியர் ஜெயாவை தொடர்பு கொண்டார். வறுமையின் காரணமாக தனக்கு பிறக்க போகும் குழந்தையை விற்க உள்ளதாக அவரிடம் தெரிவித்தார். இதையடுத்து ஜெயா ஆட்டோ நகரை சேர்ந்த ஷபானா பேகம் மற்றும் அமீனா பேகம் என்பவர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

கோசங்கி தேவி இருவரிடமும் தனித்தனியாக ரூ.5 ஆயிரம் முன்பணம் பெற்றுக்கொண்டார். அப்போது ஆண் குழந்தை பிறந்தால் ரூ 1.50 லட்சமும், பெண் குழந்தை பிறந்தால் ரூ.1 லட்சம் தர வேண்டும் என பேரம் பேசினார். கடந்த 4-ந் திகதி கோசங்கி தேவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததை அறிந்த ஜெயா வைத்தியசாலைக்கு விரைந்து வந்தார்.அப்போது எனக்கு தெரியாமல் எப்படி 2 பேரிடம் தனித்தனியாக முன்பணம் வாங்கினாய் என சண்டையிட்டார். இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அந்த வழியாக சென்றவர்கள் 2 பேரும் வாக்குவாதம் செய்வதை வீடியோவாக செல்போனில் பதிவு செய்தனர். பதிவு செய்யப்பட்ட வீடியோவை பொலிஸாருக்கு அனுப்பி வைத்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் கோசங்கி தேவி, ஜெயா, ஷபானா பேகம், அமினா பேகம் ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X