2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

லொறியில் ராகுல்

Ilango Bharathy   / 2023 மே 24 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி, லொறியில் பயணம் மேற்கொண்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெற்றதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக ராகுல் காந்தியின் 'இந்திய ஒற்றுமை பயணம்'என்ற நடைப்பயணம் கருதப்படுகின்றது.

இந்நடைப் பயணம் மூலம் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சென்று மக்களை சந்தித்து அவர்களது பிரச்சனைகளைக்  கேட்டறிந்துவந்தார்.

இந்நிலையில், நேற்று இரவு டெல்லியில் இருந்து சிம்லாவுக்கு காரில் பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, திடீரென்று சத்தீஸ்கர் நெடுஞ்சாலையில் காரை நிறுத்தி, சாலையோர உணவகங்களில் நின்றிருந்த லொறி ஓட்டுனர்களுடன் உரையாடினார்.

அதன்பிறகு, யாரும் எதிர்பாராத விதமாக கார் பயணத்தை தவிர்த்து முர்தலில் இருந்து அம்பலா வரை லொறியின் முன்பகுதியில் ஓட்டுனருடன் அமர்ந்து பயணம் மேற்கொண்டார்.

 இப் பயணத்தின்போது,லொறி ஓட்டுனர்கள் சந்திக்கும் பிரச்னைகள் மற்றும் அவர்களின் வாழ்வாதாரம் குறித்து நீண்ட நேரம் உரையாடினார். தொடர்ந்து, அம்பாலாவிலிருந்து கார் மூலம் சிம்லாவுக்கு புறப்பட்டுச் சென்றதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X