Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 ஜூலை 24 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாணவர்-மாணவி வகுப்பறைக்குள் உதட்டோடு உதடு பதித்து முத்தமிட்டு கொண்டதும், சக மாணவர்கள் அவர்களை உற்சாகப்படுத்துவதும் தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த சம்பவம் பெங்களூர் தட்சிண கன்னடா மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. அங்கு, மங்களூரு நகரில் தனியார் கல்லூரி ஒன்று உள்ளது. இந்த கல்லூரியில் சுற்றுவட்டார மற்றும் வெளியூரை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்-மாணவி வகுப்பறைக்குள் உதட்டோடு உதடு பதித்து முத்தமிட்டு கொண்டதும், சக மாணவர்கள் அவர்களை உற்சாகப்படுத்துவதும் தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அதாவது வகுப்பறைக்குள், கல்லூரி மாணவர்கள் முத்தமிடுதல் போட்டி நடத்தியதாக கூறப்படுகிறது. அதன்படி சீருடையில் இருந்த ஒரு மாணவரும், ஒரு மாணவியும் மற்ற மாணவர்கள் முன்பு வந்து நின்று பின்னர் 2 பேரும் ஒருவருக்கொருவர் முத்தமழை பொழிந்துள்ளனர்.
இதனை சக மாணவர்கள் உற்சாகப்படுத்தியுடன் வீடியோ எடுத்துள்ளனர். மேலும் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ தான் தற்போது வைரலாகி வருவது தெரியவந்துள்ளது.
இ்தற்கிடையே இந்த வீடியோவை பார்த்து பொதுமக்கள் முகம் சுழித்துள்ளனர். மேலும் அந்த கல்லூரியில் படித்து வரும் மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கைது
இதுபற்றி மங்களூரு மாநகர பொலிஸ் கமிஷனர் சசிக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
மங்களூருவில் தனியார் கல்லூரி ஒன்றில் மாணவர்-மாணவி ஒருவருக்கொருவர் முத்தமிட்டு கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி மாணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும் சம்பவத்தின்போது மாணவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தினரா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
30 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
1 hours ago