2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

வடகிழக்கு இந்திய ஏற்றுமதி 85 சதவீதம் அதிகரிப்பு

Freelancer   / 2022 டிசெம்பர் 21 , பி.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியம் கடந்த ஆறு ஆண்டுகளில் விவசாயப் பொருட்களின் ஏற்றுமதியில் 85.34 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது என்று இந்தியாவின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இப்பகுதியில் இருந்து, 2016 முதல் 2017இல் 2.52 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த ஏற்றுமதி, 2021-22இல் 17.2 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது. 

பங்களாதேஷ், பூட்டான், மத்திய கிழக்கு, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகள் ஏற்றுமதியின் முக்கிய இடங்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிக்கிம், அசாம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, அருணாச்சல பிரதேசம் மற்றும் மேகாலயா போன்ற வடகிழக்கு மாநிலங்களில் இருந்து விவசாய விளைபொருட்களின் ஏற்றுமதியில் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

சாத்தியமான சந்தை இணைப்புகளை வழங்க, விவசாய மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி அபிவிருத்தி அதிகாரசபை அண்டை நாடுகளான மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இறக்குமதியாளர்களை வரவழைத்து, விவசாயிகள் பின்பற்றும் தரமான பயிற்செய்கை முறைகள் பற்றிய நேரடித் தகவல்களைப் பெற, இறக்குமதியாளர்களின் களப் பயணங்களை ஏற்பாடு செய்தது. 

தூர கிழக்கு நாடுகள், ஐரோப்பிய நாடுகள் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் இறக்குமதியாளர்களால் வடகிழக்கு பிராந்தியத்தின் எட்டு மாநிலங்களிலும் களப்பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன.

2022 மார்ச் 10ஆம் திகதியன்று அஸ்ஸாமில் உள்ள குவஹாத்தியில் சர்வதேச வாங்குபவர்-விற்பனையாளர் சந்திப்பை  அதிகாரசபை ஏற்பாடு செய்தது.

இதில் மாநிலம் முழுவதிலுமிருந்து கண்காட்சியாளர்கள், புவியியல் குறியீடு  போன்ற புதிய தயாரிப்புகள் உட்பட பலவிதமான விவசாய-ஹார்ட்டி தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தினர். 

பழங்கள், காய்கறிகள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள், கருப்பு அரிசி, சிவப்பு அரிசி, ஜோஹா அரிசி, மசாலா, தேநீர், கோப்பி, தேன், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, மசாலா மற்றும் கரிம பொருட்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டன.

இலங்கை, டுபாய், பங்களாதேஷ், ஓமான், நெதர்லாந்து, சிங்கப்பூர் மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதியாளர்கள், வடகிழக்கு பிராந்திய மற்றும் பிற மாநிலங்களின் ஏற்றுமதியாளர்களுடன் கலந்து கொண்டனர். 
 
அதிகாரசபையின் தலையீட்டால், திரிபுராவின் பலாப்பழம் லண்டனுக்கும், நாகாலாந்தின் கிங் சில்லி லண்டனுக்கும் முதல் முறையாக உள்ளூர் ஏற்றுமதியாளர் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டது. 

மேலும், அசாமின் உள்ளூர் பழமான லெட்டேகு (பர்மிய திராட்சை) டுபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்டதுடன், அசாமின் வெற்றிலைகள் தொடர்ந்து லண்டனுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 

அதிகாரசபை அதன் விவசாய ஏற்றுமதி கொள்கையின் கீழ், விவசாய உற்பத்தி ஏற்றுமதியின் திறனைப் பயன்படுத்த மாநிலங்களை ஊக்குவிக்கிறது. 

உற்பத்தியாளர் குழு மற்றும் செயலிகளிடமிருந்து நேரடியாக தயாரிப்புகளைப் பெறுவதற்கு வாங்குபவர்களுக்கு ஒரு தளத்தை உருவாக்குவதை உச்ச அமைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .